காவல்துறை சீர்திருத்தங்கள் ஏற்படுமா ?

May be an anime-style image of 3 people, people standing and text

சென்ற வருடம் பெனிக்ஸ் ஜெயராஜ் கொலை .
நேற்று ஒரு மளிகை கடைக்காரர் கொலை ..
தமிழ்நாடு காவல்துறை உங்கள் நண்பன் என்று இனியும் சொல்லுமா ?

May be an image of 1 person and text

காவல்துறை சீர்திருத்தங்கள் ஏற்படுமா ?


Kasirajan A

#nyayayatra

சாதிக்கு முன்னுரிமை கொடுக்கும் இந்தியன் கிரிக்கெட்

Caste shame in Indian cricket

May be an image of 4 people, including Dani Goki and text that says 'Batting Rohit Sharma Tim Southee Kyle Jamieson Shubman Gill BJ Watling Neil Wagner 6s S/R 6 50.00 28 64 3 0 43.75 Cheteshwar Pujara lbw Trent Boult Virat K() bw Kyle Jamieson 8 54 2 0 14.81 Ajinkya Rahane lom Latham Neil Wagner 44 132 0 33.33 Rishabh 'n(W) Tom Latham Kyle Jamieson 49 117 5 0 41.88 Ravindra Jadeja BJ Watling Trent Boult 18.18 15 53 2 0 28.30 Ravichandran Ashwin Tom Latham b Tim Southee S Ishant Sharma Ross Taylor Kyle Jamieson 0 81.48 Jasprit Bumrah bw Kyle Jamieson 25.00 Mohammed Shami not out 01000.00 400.00'

சாதிக்கு முன்னுரிமை கொடுக்கும் இந்தியன் கிரிக்கெட் தோற்றுப் போனது ஒரு வகையில் சந்தோஷமே!
கோலி, சர்மா ,பண்ட்,ஷர்மா என்ற சாதி அடைமொழியை முன்னிறுத்தும் கிரிக்கெட் மேட்டிமை சார்புத்தன்மை அரசியல் தோல்விக்கு காரணம் என்று பகிரங்கமாக வெளிப்படையாக சொல்லலாம்.
உயர் சாதியை தூக்கிப் பிடிக்கும் கிரிக்கெட்டை சாமானியர்கள் புறக்கணிக்க வேண்டிய தேவை இருக்கிறது!

May be an image of 3 people, people playing sports and text that says 'NEDBLE 18 WRAT ZEALAN விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய ஆக்ரோஷத்தில் டெய்லர், வெற்றி மகிழ்ச்சியில் நியூசிலாந்து வீரர்கள் வில்லியம்சன்- ராஸ் நியூசிலாந்துபவுலர் ஜாமிசன். கடைசி நாளில் அதிரடி திருப்பம்: உலக டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 'சாம்பியன்' இந்திய அணியை சுருட்டியது இரண்டு இன்னிங்சிலும் ஒரு அணி நீண்டகால ஏக்கத்தை இந்திய யில் வியை தழுவிய நியூசிலாந்து வர் கூட 50 ரன்னை தொட தணித்துள்ளது.'

சாதி பெயர் தாண்டி “உயர்சாதி” பெருமையை 40-50 வருடமாக தூக்கி பிடிக்கும் இந்திய கிரிக்கெட் சமூக அவலமே ?


Kasirajan A

குருதிப்புனல் – ஹீரோ வில்லனாக – Why 54+ years Indo Naxal Insurgency ?

நான் போராளி எனும் பத்ரியிடம்

புரட்சி எல்லாம் நீர்த்து போச்சு… சித்தாந்தம் சொல்லி கொடுத்தவங்க எல்லாம் சேது போய்ட்டாங்க.
உன்ன சுத்தி இருக்கறவங்கள எல்லாம் பார் பத்ரி.
இவங்கள அரசாங்கம் விலை கொடுத்து வாங்கிடும் .
பெரும்பாலானோர் காசுக்கு பின்னால் ஓடும் கூட்டம்..
ஒரு சிறு விழுக்காடுதான் புரட்சி என்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள்
அவர்களை அரசாங்கம் விலை கொடுத்து வாங்கிடும் நசுக்கிடும் என்று சொல்லும் போது

நீ தோற்கிற பக்கம் நின்று பேசுகிறாய். என்று பதில் சொல்லும் தொணி!

நான் நம்பற நேர்மைக்காக உயிர் வாழ்கிறவன் .

நான் நம்புற கொள்கைக்காக சாகக் கூட தயாராக இருக்கறவன் !

போராளி பத்ரி ஆதிக்க சமூக கைக்கூலி ஆதி நாராயனிடம் சொல்லும் வசனம் ..

அதுவும் அடுத்த நொடி கொல்லப்பட எல்லா வாய்ப்பு இருக்கும் சூழலில் பேசும் #attitude மொமெண்ட்

ஒரு மனிதனை பொறுமையின் எல்லைக்கு கொண்டு சென்றால்
அவனுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை சமூகம் ஏமாற்றி பறித்து கொண்டால்
அவன் தீவிரவாதியாக மாறுவான்…

Kamal Haasan Wants To Encounter Nassar - Drohi ( Kuruthipunal ) Movie  Scenes - YouTube

ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கு. இயற்கையின் நியதி!

போராளியின் பிரேக்கிங் பாயிண்ட்
அரசு அதிகாரியின் பிரேக்கிங் பாயிண்ட்

கொள்கையில் தான் முடிவடைகிறது..

ஒரு பக்கத்தின் தலை பூ கதை .. அரசாங்கம் சரியான வழியில் இயங்கினால் போராளி சமூகத்தில் ஏன் போராளியாக இருக்கணும்.. அவனும் சக அதிகாரியாக தான் இருந்து இருப்பான்.

Kasirajan A

Data facts regarding Indo Naxal insurgency

The present strength of armed Naxalite cadres is around 7,200 and Naxal violence was reported from 509 police stations last year as against 517 in 2004 and 518 in 2003, according to information furnished to it by the Union Home Ministry.

In 2006, Prime Minister Manmohan Singh called the Naxalites the “single biggest internal security challenge ever faced by our country”.

In June 2011, he said, “Development is the master remedy to win over people”, adding that the government was “strengthening the development work in the 60 Maoist-affected districts

“It is no more a law and order problem but poses a threat to internal security as is evident from their declaration of Compact Revolutionary Zone or red corridor from Nepal to Tamil Nadu, almost a third of the country’s total area,” the Standing Committee on Home Affairs, headed by Sushma Swaraj, said in its report tabled in Parliament.

In 2018, A senior home ministry official says the National Democratic Alliance (NDA) government sought to stem insurgency by earmarking development funds for revolt-hit areas and improving policing. 

“One of the major initiatives of the government was clearing implementation of a Rs 25,060 crore umbrella scheme to modernise central and state police forces over the next three years,” the official said.

https://en.wikipedia.org/wiki/Naxalite%E2%80%93Maoist_insurgency

நீதிமன்றத்தில் நடந்த பணம் கையாடல் ?

நீதிமன்றத்தில் நடந்த பணம் கையாடல்
அதுவும் நீதிமன்ற ஊழியரே என்றால் என்ன அர்த்தம் ?
நீதிமன்ற நடவடிக்கை தாமதத்தை, ஒரு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பாக நீதிமன்ற ஊழியரே நினைத்து உள்ளாரா ?
இதை எல்லாம் விமர்சனம் செய்தால் நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா ?


Why Judiciary has to come under RTI act transparency for money related settlement cases disbursement ?

#nyayayatra for judicial accountability for delays and accountability

Kasirajan A

HUMAN RIGHTS IN THE WAKE OF NEW SOCIAL AND SCIENTIFIC DEVELOPMENT: A  CRITICAL ANALYSIS – RESEARCHERS CLUB

பிற நாட்டில் உள்ளதைப் போல, முதலில் சமரசம் செய்ய கட்டளையிட வேண்டும்.

சொத்து, கம்பெனி, தொழிலாளர், குடும்பப் பிரச்னை, இழப்பீடு, பணப்பரிவர்த்தனை, திவால் வழக்குகள் முன்னுரிமை தரப்பட்டு தீர்வுகள் காணப்பட வேண்டும்.

வலியோர்க்குத் தான் நீதி; எளியோர்க்கு அல்ல என்ற நிலை எப்போதும் கூடாது. எனவே வானம் வீழினும் நீதி வாழ வேண்டும்.

-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர்,

https://www.dinamalar.com/news_detail.asp?id=1395589

விசாகா கமிட்டி இல்லா சினிமா துறை – #justiceforvijayalakshmi

#justiceforvijayalakshmi

திரு சீமானுக்கு ஒரு நீதி
அதிமுக மணிகண்டனுக்கு ஒரு நீதியா ?
நடிகைக்கு ஒரு நீதி !
துணை நடிகைக்கு ஒரு நீதியா?

சிஸ்டம் சரியில்லை என்று சொன்ன ரஜினிகாந்த்
அரசியலில் வளர்ந்து இருக்கும் தே மு தி க விஜயகாந்த்
ஊழல் இல்லா ஆட்சி என்று பேசும் நீதி மய்யம் கமல்ஹாசன்
லதிமுக டி ராஜேந்தர்.
அரசியல் அவதாரம் எடுத்த விஷால்

என்னை விபாச்சாரி என சோசியல் மீடியாவில் பலரும் அவதூறாக விமர்சித்தனர். எனக்கு இதுக்கு மேல வாழ பிடிக்கல. சீமானை எக்காரணம் கொண்டு விட்டுவிடாதீர்கள். சீமானுக்கு முன் ஜாமீனுக்கு கூட கிடைக்க கூடாது. நான் பலரிடம் கெஞ்சிவிட்டேன், ஆனால் யாரும் எனக்கு நீதி கொடுக்கவில்லை. என்னுடைய மரணம் நல்ல பாடமாக அமைய வேண்டும். சீமான் எந்த காரணத்தாலும் சும்மா விடக்கூடாது. எனக்காக சீமானை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். – விஜயலட்சுமி

தனது துறையில் பணியாற்றிய சக சினிமா கலைஞர் விஜயலட்சுமி அவர்களின் பிரச்சினைக்கு அவர்கள் மீதான விபச்சாரி அவதூறுக்கு தற்கொலைக்கு தூண்டிய வழக்கிற்கு பாராமுகமாக இருப்பது ஏனோ ?

இன்றைய அரசியல்வாதி சீமான் ஒரு நடிகர் , இயக்குனர் என்பதன் மூலம் சினிமா சார்ந்த பிரச்சினையை கண்டும் காணாமல் இருந்து விட்டு சமூக பிரச்சனைக்கு மட்டும் பில்டப் குரல் கொடுப்பது சினிமா கலைஞர்களின் நிஜ நடிப்போ ?

விசாகா கமிட்டி இல்லாத நடிகர் சங்கத்தை கலைத்து விடலாமா ?

Kasirajan A

https://tamil.asianetnews.com/cinema/actress-vijaylakshmi-who-atten-suicide-for-seeman-last-video-going-viral-in-social-media-qe2ysa?fbclid=IwAR1EBOF6fEYNFzfmZ06Hm1X82AfXQThUwcxIgysZyWjWztia3IeEHUhi3ms

போலி என்கவுண்டர் உலகம் – காவல்துறை அதிகாரி கொலை காரணம் ?

போலி என்கவுண்டர் நடக்கும் உலகம் இது.

According to the NHRC figures, during 2002–2007, there were four alleged fake encounters in Gujarat (out of 440 fake encounters in all of India)

Sadiq Jamal (2003)
Ishrat Jahan case (2004)
Sohrabuddin Sheikh case (2005)
Tulsiram Prajapati case (2006)

செய்தித்தாள் கதை அடிப்படையில் என்கவுண்டர் செய்யாமல் நியாயத்தை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையின் கடமை இங்கே அதிகம் உள்ளது.

காவல்துறை அதிகாரி கொலை செய்தால் உயிர் இருக்காது என்கவுண்டர் இருக்கும் என்று தெரிந்தும் கொலை செய்யும் செய்த நோக்கம் என்ன ?

உண்மையாக விசாரணை நடத்தி புலனாய்வு செய்து குற்றவாளிகளை கோர்ட்டில் நிறுத்தி நியாயம் வாங்கி தருமாறு கேட்டு நீதி கிடைக்காத 3.72 Backlog case கோடியில் ஒரு வழக்காடி சாமானியனாக கொள்கிறோம் .

குறிப்பாக இந்த காவல்துறை அதிகாரி ஏன் கொல்லப்பட்டார் ? பெண்ணுக்கு எதிரான குற்றம் என்ற புகாரில் உண்மையான முகாந்திரம் இருந்தாலும் ஏன் குற்றவாளி தனிப்பட்ட முறையில் காவல் துறை அதிகாரியை கொல்ல வேண்டும் .

முன்விரோதம் என்றால் எத்தனை பெண்களுக்கு எதிரான குற்றம் இங்கே பதியப்படுகிறது .
ஏன் இந்த வழக்குக்கு கொலை நடந்தது ?

எய்தவன் இருக்க அம்பை நோவது ஏனோ ?

உண்மையாக விசாரணை நடத்தி புலனாய்வு செய்து குற்றவாளிகளை கோர்ட்டில் நிறுத்தி நியாயம் வாங்கி தருமாறு கேட்டு நீதி கிடைக்காத 3.72 கோடியில் ஒரு வழக்காடி சாமானியனாக கொள்கிறோம் .

மனித உரிமை தாண்டி உண்மை என்ன என்று மக்களுக்கு தெரிய வேண்டும் ?

Kasirajan A

1999 காதல் கவிதை படம் – ரசித்த காட்சிகளும் நினைவலைகளும்!

காதல் கவிதை படம் காதல் கோட்டை படத்தின் இரண்டாம் பாகம் தான்!
இயக்குனர் அகத்தியன் சில சில மாற்றங்கள் மூலம் ஒரே கதையை வேறு விதமாக திரைக்கதையாக பிரசன்ட் செய்திருப்பார்கள்.

Kadhal Kavithai Full Movie | Prashanth, Isha Koppikar | Ilaiyaraaja |  Agathiyan |Aalana Naal Mudhala - YouTube


பார்க்காமலே காதல், காதல் கோட்டை படத்தில் சாராம்சம் இங்கே நாயகன் நாயகி பார்த்தாலும் பேசினாலும் ஒருவரையொருவர் தெரியாது. பார்க்காத பெண்ணை பார்க்காத ஆணை இருவரும் உருகி காதலிப்பார்கள். நேரில் பார்க்கும் அதே பெண்ணை அதே ஆண் மீது வேறு விதமான திமிர் பிடித்தவன்,பிடித்தவள் பிம்ப கட்டமைப்பு இருக்கும்.

அதே பெண் காதலை சொல்லும் போது ” பார்க்காத ஒரு பெண்ணை எனக்கு பிடித்திருக்கிறது ! பார்க்கும் உன்னை எனக்கு பிடிக்கவில்லை” என்று சொல்வார். அதே நாயகன் அதே பெண்ணை தான் பார்க்காமல் பிடிக்குது என்று சொல்லி இருப்பார் ஆனால் நேரில் அதே நிஜமான பெண்ணை நிழலான அச்சு அசல் அதே கனவு பெண்ணுக்காக இல்லை என்று மறுத்து இருப்பார்.

ஒரே காரணம் ..
அந்த கவிதை “வாசமிட்ட மலர்களை கொண்டு ” தெரியும் முன் தெரிந்த பின் என்பதே விடை

வாசம் மிக்க மலர்களைக் கொண்டு
வாசம் மிக்க இதயங்கள் பரிமாறிக் கொண்டோம்
என் நெஞ்சில் வாசம் செய்பவள் எங்கும் வாசம் செய்கிறாள்
எங்கோ வாசம் செய்கிறாள்

காதல் மீதில் ஒரு காதல்
காதல் கிளி எங்கே
காதல் சொல்லித் தந்த பாடல்
தந்த கிளி நீ எங்கே
தேசம் தாண்டி காதல் வந்தது
மானே மானே
காதல் தேடி கவிதை சொன்னது
பூக்கள் தானே….
பூக்கள் தோறும் தேடிப் பார்க்கிறேன்
எங்கே எங்கே
பூவைப் போல வாடிப் போகிறேன்
அன்பே அன்பே

https://www.tamil2lyrics.com/lyrics/kadhal-meethu-song-lyrics/

காதல் கோட்டையில் ஒரு தலையாக காதலிக்கும் ஹீரா செய்த பணக்கார வேடத்தை இந்தப்படத்தில் பணக்காரனை காதலிக்கும் ஒரு upper மிடில்கிளாஸ் காரியதரிசி பெண்ணாக கஸ்தூரி செய்திருப்பார்.

காதல் கோட்டையில் ஆட்டோ ஓட்டுனராக தலைவாசல் விஜய் செய்த கதாபாத்திரம்தான் காதல் கவிதை படத்தில் காதல் தூதுவராக வெளிநாட்டு நண்பராக நடித்திருப்பார் காதலியை கண்டுபிடித்து தரும் வேலை தலைவாசல் விஜய்க்கு இரண்டு படத்திலும் ஒரே தூதுவர் ரோல்.

காதலன் காதலிக்கு இடையில் ஒரு கண்ணைக்கவரும் மூன்றாவது நபர் இருந்தாலும் காதலன் காதலியை விடாப்பிடியாக சூழ்நிலை கருதாமல் கைப்பிடித்தார் நினைத்தார் என்பதே காதல் கோட்டையும் காதல் கவிதையும். இந்த காதல் கவிதையில் என்ன ஸ்பெஷல் என்றால் இளவரசி டயானா ஊரே காதலித்த பெண்ணை தாயாக பார்த்த அந்த தருணத்தில் காதலி காதலனை கண்ட தருணமாக ,கண்டுபிடித்த தருணமாக காதல் கவிதை படத்தின் மையக் கருவாக அமைந்திருக்கும்!

Kaadhal Kavidai (1998) - IMDb

காதல் கவிதை படத்தில் ரொம்பவும் பிடித்த Highlighted விஷயம் நாயகன் விஷ்வாவின் பாத்திரப்படைப்பு!

நிறைய ஒன் லைனர்கள்! அலட்சியம் ,நக்கல், நையாண்டி ,குறும்பு ,சேட்டை எல்லாம் பொருந்திய கலவையாக நாயகன். கிட்டத்தட்ட வில்லன் போல வெறுப்பேற்றும் விளையடுத்தனமான நாயக பிம்பம்

சில வாவ் ஒன் லைனர்கள்

காட்சி ஒன்று

நாயகன்: 500 வேணும் . 100 ரூபாய் எல்லாம் பிச்சை காசு !
நாயகி: ஓ எங்கே பிச்சைகாரங்க எல்லாம் 100 ரூபாய் போடுவீர்களா !
நாயகன்: கை நீட்டுங்க .நீங்களும் கை நீட்டுங்க..இதான் பிச்சை .

காட்சி இரண்டு

டிப்ஸ் வாங்க மாட்டியா !
வாங்க மாட்டேன் !
Insult பண்றியா
ஆமாம் insult பண்றேன் !

என்ன நக்கலா
ஆமாங்க!
உன் திமிர் உன்ன விட்டுப் போகல !
ஆமாம் போகல !

complaint பண்ணி வேலையை விட்டு தூக்கிடுவேன்.!
செய்ங்க உங்க புண்ணியத்துல ஒரு நல்ல வேலை கிடைக்கட்டும்.!

காட்சி மூன்று

நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க ..நான் வெளியில போகவா
நண்பர்கள் ரொம்ப நாள் கழிச்சு பேசுறீங்க . நான் எதுக்கு நடுவில ..
ஐயோ அப்படி இல்ல சார்
அப்ப கொஞ்சம் வெளியே போய் பேசுறீங்களா..

காட்சி நான்கு

திடீர்னு நான் உங்களுக்கு ஐ லவ் யூ சொன்னா என்ன பண்ணுவீங்க ..
நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லிங்க ..
எப்படிப்பட்ட பொண்ணுக்கும் லவ் வரும்ங்க .

May be an image of 1 person

ஐ .. ஐ ,.
.அச்சோ சோ நீங்க தனியா இருக்கீங்க.பதட்டப்படுறீங்க. நான் அப்படிப்பட்ட பையன் இல்லிங்க. இப்ப நான் flowers வாங்க வந்தேன் .இன்னொரு நாள் எல்லார் முன்னாடி “ஐ லவ் யூ” சொல்றேன். ஓகே பை ..

காட்சி ஐந்து

இந்த புத்தகத்தை படிங்க
இல்ல படிக்காதீங்க
என்ன பார்த்தா பைத்தியம் மாதிரி இருக்கா
இல்லை படிங்க பிடிக்கும்.

May be an image of 2 people

காட்சி ஆறு

நான் பொண்ணு
அப்படி நினைக்கவே இல்ல
தேவதைனு சொல்லவரீங்களா !
நாயகன்: இதோடா .இவ்ளோ ஓவர் confidence ஆ

காட்சி ஏழு

ஈவினிங் என்ன பிளான்?
நாயகன்: தூக்கு மாட்டிக்க போறேன் . இதுக்கெல்லாம் கம்பெனி கொடுக்க மாட்டீங்களே!

காட்சி எட்டு

ஐ லவ் யூ சொல்லும் காரியதரிசியிடம்.
நீங்க என்ன பண்ணுறீங்க .அரை நாள் லீவ் போட்டுட்டு ஐ லவ் யூ சொல்லி ப்ராக்டிஸ் பண்ணுறீங்க. எனக்கு புடிச்சா மாதிரி சொன்னா நான் உங்களுக்கு திரும்ப ஐ லவ் யூ சொல்வேன் .சொல்லலாம்..

அம்மாவை மௌன விரதம் இருக்க சொல்லி விட்டு அப்பாவிடம் அம்மா பேசல னு ஹாஸ்பிடல்ல சேர்க்கும் அளவுக்கு வீட்டில் கலவரம் செய்வது .

ரகளையான இளமை குறும்பு கொப்பளிக்கும் screenplay மற்றும் கதையோட்டம்.
விஷ்வா ஜோதி மற்றும் ஸ்வப்னா கதாபாத்திரமும் ..காதல் கவிதை கதாபாத்திரமும்.
90s கிட் இஷா கோபிக்கர் கண்கள் சிரிப்பு அவ்ளோ அலட்டல் குறும்பு அழகு .
காதல் கவிதைக்கு ஏற்றார் போல “Screen presence to core” and APT lead cute role.குறும்பு , சிரிப்பு, கோபம், அலட்சியம் என பல நிமிடத்துக்கு நிமிடம் மாறும் முகபாவங்கள் இஷா கோபிக்கர் வெற்றிடத்தை தான் ஜோதிகா நிரப்பினார் என்றே 90s கிட் ஆக நம்புகிறேன் .

அலட்சியமான தன்முனைப்பு அதிகம் உள்ள நாயகன் கதாபாத்திரம் ஒரு வித்தியாசமான அனுபவமே !
நிஜ வாழ்க்கையில் சில நண்பர்களை நிஜ குறும்புத்தனமான ஒன் லைனர் அப்படி பார்த்த போது தான் இன்னும் வாழ்க்கை ரசிப்புத்தன்மை மெருகூட்டியது எனலாம்.

+2 லீவு நாட்களில் ரசித்த காட்சிகளும் நினைவலைகளும் …

  • Kasirajan A

பல குடிகார தந்தைக்கு – தந்தையர் தின வாழ்த்துக்கள் !

தந்தையர் பல விதம்!

ஒரு தந்தை குடிப்பழக்கம் முற்றி இனிமேல் தன்னால் திருந்த முடியாது, திரும்ப முடியாது
சொத்துக்களை இழந்த ஆகிவிட்டது ..
குடிப்பழக்கத்திலிருந்து சுத்தமாக விடுபட முடியவில்லை.
வேலையும் தற்காலிக பணிநீக்க சூழ்நிலை

தான் இறந்தால் தான் தனது மனைவிக்கு கருணை அடிப்படையில் அந்த வேலை கிடைக்கும் இல்லையென்றால் ஒரு வருடம் கழித்து வேலையும் இழந்து சாகும் நிலை தான்.
இதற்காக முன்னரே தற்கொலை செய்து கொண்டால் வேலை அவரது மனைவிக்கு கிடைக்கும் அதை வைத்து மனைவி மகன் வாழ்ந்து விடுவார்கள் என்று தற்கொலை செய்து கொண்ட தந்தை..

இன்னொரு டாக்டர் தந்தை தனக்கு புற்று நோய் இருப்பது தெரிந்தும்
திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளைப் பெற்று மகன் எட்டு வயதை அடையும்போது மனைவியை விதவை ஆக்கிவிட்டு இந்த சமூகத்தில் கஷ்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு விதவை மகனாக வாழ்க்கை வாழ்ந்து பல்வேறு இன்னல்களுக்கு இடையில் படித்து வேலைக்கு சென்று கல்யாணம் செய்து ஒரு வாரத்திலேயே தற்கொலையும் செய்து கொண்ட நண்பர் அதன் காரணமான அவரின் டாக்டர் தந்தை திருமண முடிவு .

இன்னொருவர் டிரைவர் தந்தை திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றபின் குடிப்பழக்கத்தில் மூழ்கி நெஞ்சு வலி வரும்வரை குடி பழக்கத்தை விட முடியாமல் குடும்ப கஷ்டத்தையும் சமாளிக்க முடியாமல் நெஞ்சுவலியால் பிரிந்துபோன தந்தை .

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் தற்போது கொரோனாவில் வில் உயிரிழந்த நபர்,
2 குழந்தைகளுக்கு தந்தையாக தினமும் 500 ரூபாய் குறையாமல் குடிப்பவராக, கொரோனா சமயத்திலும் குடிபழக்கம் , புகைபிடிப்பது என்று கொரோனா வந்து தனது குடும்பத்தை நடுரோட்டில் தவிக்க விட்டுப் போன இன்னொரு பாசமான தந்தை.

பல கண்ணீர் கதைகள் தினமும் 120 கோடி குடிக்கும் குடிகார சமூகத்தில் ! கண்டது கேட்டது பார்த்தது என்று பல கண்ணீர் கதைகள்.

பொதுவான விதி தந்தை இறந்த பிறகு அவர்களது மனைவி மக்கள் சந்ததிகள் கஷ்டப்பட்டு முன்னேற ஒரு 10-20 வருட போராட்டம் , பல சின்ன சின்ன பெரிய தியாகம், இரண்டாம் குடிமக்களாக நடத்தப்படும் நிலை ,சொத்துரிமை மறுக்கப்படும் சாதாரண நிலை என்று சமூகத்தில் தீண்டாமையை கடக்காமல் வாழ்க்கை இல்லை. விதி வலியது .

தந்தை இழந்த குடும்ப சந்ததிகள் முன்னேற ஒரு 15-25 வருட போராட்டம்,இழப்பு, சாதாரண வலியா?

குடிப்பழக்கம் இருக்கும் நபருக்கு பெண் கொடுப்போம் ! உறவு கொண்டாடுவோம் ! -Tasmac State goverment standpoint

பல குடிகார தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள் !

Kasirajan A

அதிசயம் ஆனால் உண்மை ! செட்டியார் மேல்நிலை பள்ளி சிதம்பரம்

ஒரு பள்ளியில் ஒரு குறிப்பிட்ட பாடம் நடத்தாமலேயே அந்த பள்ளி மாணவர்கள் 90% மேல் மார்க் வாங்குகிறார்கள் ..90 சதவீதம் மேல் பாஸ் .
அதிசயம் ஆனால் உண்மை !
வாழ்க்கையில் நாம் சில அதிசயங்களை எளிதாக கடந்து செல்வோம் அதைப் பற்றி நினைவு கூறும் போது தான் நாம் அதிசயமான நிகழ்வுகளை கண் கூடாக கண்டுள்ளோம் என்று உணர்வோம்.!
நான் கண்ட அதிசயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்


ஆம் ..
ஒரு பள்ளியில் ஒரு குறிப்பிட்ட பாடம் நடத்தாமலேயே அந்த பள்ளி மாணவர்கள் 90% மேல் மார்க் வாங்குகிறார்கள் ..90 சதவீதம் மேல் பாஸ் .
எப்படி சாத்தியம்?
ஒரு வருடத்தில் 10 யூனிட்டில் 1 யூனிட் கூட நடத்தாமல் அந்த பள்ளியின் மாணவர்கள் 90 சதவீதத்திற்கு மேல் பாஸ் செய்கிறார்கள்
எப்படி சாத்தியம்! அதிசயம் அல்லவா!
இது எங்கள் பள்ளியில் நடந்த கதைதான்.
அந்தப் பாடம் கணித பாடம்!
பள்ளி செட்டியார் ஸ்கூல் மேல்நிலைப்பள்ளி சிதம்பரம்
அதிசயம் நடந்த ஆண்டு 1999 2000… பல வருடம் நடந்த அதிசயம் ..எனக்கு 1999 2000 ஆம் ஆண்டு பார்க்கும் பாக்கியம் கிடைத்தது .
ஆசிரியர் பெயர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்
படிப்பில் தங்கப்பதக்கம் வாங்கியதாக சொல்கிறார்கள்!
தங்கப்பதக்கம் என்றால் சும்மாவா !
இரண்டு வருடம் 20 யூனிட் ஒன்றுக்கு கூட பாடம் எடுக்கவே இல்லை இருந்தாலும் அந்த பள்ளியின் மாணவர்கள் 90 சதவீதம் மேல் தேர்ச்சி .. அப்படி என்ன ஸ்பெஷல்?
பாடமே எடுக்கவில்லை என்பதுதான் ஸ்பெஷாலிட்டி ..
பல வருடம் பாடம் எடுக்காமலே சாக்பீஸ் தொடாமலே duster மீது கைபடாமலே சாதனை படைத்துள்ளார் .
எனக்கு தெரிந்து ஒரு நாள் சாக்பீஸ் எடுத்து எழுதினார் அன்று அடை மழை பெய்தது ..

Modus operandi

எந்த பாடமும் எடுக்க மாட்டார் ! வெறும் கேள்விகளை மட்டும் 25 நிமிடம் 30 நிமிடம் பேசிவிட்டு இதை solve செய்யுங்கள் என்று சென்று விடுவார். பாடம் நடத்தாமல் பள்ளி மாணவர்கள் கணக்கு பாடம் படித்தார்கள்.. பாஸ் செய்தார்கள்.
எந்த பாடமும் எடுக்க மாட்டார் வெறும் கேள்விகளை மட்டும் 25 நிமிடம் 30 நிமிடம் பேசிவிட்டு இதை solve செய்யுங்கள் என்று சென்று விடுவார். பாடம் நடத்தாமல் பள்ளி மாணவர்கள் கணக்கு பாடம் படித்தார்கள்.. பாஸ் செய்தார்கள்.
இவரின் சேவையைப் பாராட்டி இவருக்கு “துணை ஹெட்மாஸ்டர்” AHM பதவி கொடுக்கப்பட்டது
சாதனைக்கு மேலும் ஒரு சாதனை!
ஏனோ மற்ற ஆசிரியர்கள் விவரம் இல்லாமல் எல்லோருமே இவரின் புத்திசாலித்தனம் இவரின் வழியை பின்பற்றாமல் “மாங்கு மாங்கு” என்று பாடம் எடுத்தது ஏனென்று தெரியவில்லை.

MRK தவிர எல்லா ஆசிரியரும் பாடம் எடுத்தார்கள்

வயோதிகத்திலும் , accident பிறகும் குறைந்தபட்சம் 60% 70% சிலர் பாடம் எடுத்து முடித்தார்கள். இவர் “Goldmedalist” MRK 5% 10% கூட எடுக்கவே இல்லை என்பதுதான் நிதர்சனம்!

இவர் மட்டுமா ! +2 கணிதத்தில் இப்படி என்றால் இல்லை
பத்தாம் வகுப்பு வரை நாச்சியப்பன் மற்றும் சுந்தரலிங்கம் என்று பலரும் பத்தாம் வகுப்பிலும் பாடம் எடுக்காமலேயே சாதனை முயற்சி செய்துள்ளதாக அறிகிறோம்!
யாருக்கு என்ன பாதிப்பு !
எனது முத்துமாணிக்கம் தெருவில் சத்துணவில் வேலை செய்யும் விதவைப் பெண் ஒருவர் அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் . கஷ்ட ஜீவன குடும்பம் .
அதில் ஒரு மகன் கணிதத்தில் மட்டும் 15 மேற்கில் பெயிலாகி 340சொச்சம் மதிப்பெண் . பத்தாம் வகுப்பை தாண்டவே இல்லை மற்ற எல்லாவற்றிலும் பாஸ் செய்துள்ளார் .
அந்த விதவைப் பெண் சத்துணவு வேலை தவிர நகைகளை உருக்கி செய்யும் ஆசாரி பத்தர் வேலையும் செய்வார் அவர்கள் வீட்டிற்கு பலமுறை காமிக்ஸ் புத்தகம் படிக்க சென்று உள்ளேன் . அது வீடு என்று சொல்வதை விட ஒரே ஒரு 150 -200 சதுரடி அறைதான் . 2 மகன்கள் ஒரு மகள் இந்த விதவைத்தாய் எல்லோருக்கும் ஒரே அறை வீடு. அவர்கள் கனவு வாழ்க்கையில் மகன்கள் படித்து
முன்னேறுவதுதான் .
பெரிய பையன் படிக்காமலே வாழ்க்கையை ஆட்டோ ஓட்டுநராக இருக்க முக்கியகாரணம் கணக்கு வாத்தியார் பாடம் எடுக்காத சாதனை தவிர வேறு எதுவும் எனக்கு தோன்றவே இல்லை..
இன்று ஆட்டோ ஓட்டுனராக வாழ்க்கையை ஓட்டும் அவர் கஷ்ட ஜீவன வாழ்க்கையை வாழும் போது அவரின் ஓவிய திறமை, பேச்சு திறமை , கற்பனை வளம் மற்றும் சரித்திர நாவல் புத்தகம் வாசிக்கும் பழக்கம் ,கதை சொல்லும் திறமை எல்லாவற்றையும் கண்டு வியந்துள்ளேன்.
அந்த விதவை தாயின் வலியை கனவை பையன் தேர்ச்சி இல்லை என்று தகர்த்த நாளை நினைவு கூறுகிறேன்..
விளிம்பு நிலை மனிதர்கள் விளிம்பு நிலை மனிதராகவே !
10th +2 தேர்ச்சி அடையாமல் பலரை நடுரோட்டுக்கு கொண்டு வந்த சாதனை பெருமை RCTHSS Chidambaram கணித ஆசிரிய கூட்டணி சாதனை!
இதுல ஒரு +1 class நிகழ்வு .. சுந்தரலிங்கம் வாத்தியார் பள்ளியில் கிசு கிசு போல பூடகமா பேசினார் ..
“நீங்க எல்லாம் தெருக்கு தெருக்கு பரஞ்சோதி முனிவர், அருளானந்தம் வாத்தியார் என்று கணித அருள் மற்றும் அன்பு பெறுகிறீர்கள். வெட்கமே இல்லாமல் ஊரில் டியூஷன் எடுக்கும் வாத்தியார் பெயரை சொல்லி பரிகாசம் செய்ய தெரிந்தவருக்கு பாடம் எடுக்க என்ன தயக்கம் ?
கணித ஆசிரியர் சம்பளம் மட்டும் எப்படி வெட்கப்படாமல் கூச்சம் இல்லாமல் வாங்கினார்களோ தெரியவில்லை.
ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது வழக்கு போல பாடம் எடுக்காமல் சம்பளம் வாங்கியது குறித்து வழக்கு தொடுக்கலாம்!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் கணிதத்தில் 70 மார்க் எடுப்பது பலருக்கு கஷ்டம் தான் .கணிதம் தான் practical இல்லாமல் பாஸ் செய்ய வேண்டும் !
பல நேரங்களில் தேர்ச்சியை பாதிப்பது கணக்கு பாடமே !
பல பள்ளியின் கதைதான் .. எனது பள்ளியின் ஒரு விதவைத்தாயின் கனவை சிதைத்த கண் முன்னே பாடம் எடுக்காமல் சம்பளம் வாங்கிய கணித ஆசிரியரை MRK+Sundaralingam+ Nachimuthu RCTHSS Maths combo நினைவு கூறுகிறோம்.
MRK அவர்களின் தங்க பதக்கதால் சமுதாயத்துக்கு ஏதேனும் பயன் உண்டா ?
பதில் தெரிந்தால் கூறுங்கள்.
அதே ஊரில் அதே பள்ளியில் அதே வருடத்தில் MRK தவிர்த்து மற்ற எல்லா +1 +2 A1/A2 ஆசிரியரும் சீரிய முறையில் பாடம் எடுத்து மாண்பை நம்பிக்கையை கொடுத்தது ஆறுதல் ..
Thanks to Physics – SelvaKumar sir Chemistry – Madam Tamil – Ayya Botany – Muthukarupan Sir Zoology – Balasaraswathy Madam English – Krishnamurthy Sir for the consistent class room sessions in year 1999-2000 year.
சொல்ல வேண்டியது .. விதைத்ததை அறுவடை செய்ய வேண்டும்..


பாடம் எடுக்காத சாதனையை ஊருக்கு எடுத்துரைப்போம் ! 20 வருடம் கழித்தும்…
இந்த தலைமுறை ஆசிரியர் பார்வைக்கு ..
மாற்று கருத்து இருந்தால் விவாதிக்கலாம் !

Kasirajan A

1999-2000 year RCTHSS chidambaram வாழ்வியல் நினைவலைகள்


https://www.facebook.com/photo.php?fbid=564763436886734&set=t.100000592484784&type=3

பேமிலி மேன் -2 – #banfamilyman2 – அபத்தமும் போலி பிம்ப கட்டமைப்பு பொய்களும்

டெல்லி என்று மார் தட்டி கொள்ளும் பார்ப்பனர்கள் தான் திவாரி ஷர்மா குல்கர்னி இவர்கள்தான் கடமை கடமை என்று குடும்பத்தை விட்டு விட்டு நாட்டை காக்கிறார்கள் . நம்புங்கள் என்று காதில் பூ சுற்றுகிறது… ..
அதாவது பாகிஸ்தான் முஸ்லீம்களையும் , இலங்கை ஈழத் தமிழர்களையும் வெற்றி கொண்டு பார்ப்பன திவாரி , ஷர்மா ,குல்கர்னி கூட்டம் தான் காப்பாற்றுகிறது .
திரையில் திவாரி புத்திசாலி ,கொஞ்சம் கோபக்காரர் , குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் நாட்டுக்காக சேவை செய்பவர் ,தேசத்திற்காக உயிரை கொடுத்து பொய் சொல்லி சூழ்ச்சி செய்து உளவு வேலை செய்து நாட்டை காப்பவர் ,நண்பர்களுக்கு நல்ல சிறந்த நண்பராக இருப்பார், வாயை திறந்தால் அவ்வப்போது நிறைய கெட்ட வார்த்தை வரும் நேர்மையானவராம் !
சுருக்கமாக சொக்கத்தங்கம் என்று பிம்பத்தை கட்டமைத்து உள்ளனர்
பார்ப்பனர் திவாரி பற்றி பொய் பிம்பம்தானே கட்டமைக்க முடியும் ..

May be an image of 2 people and text that says 'THE AMAZON FAMILY ORIGINAL "பேமிலி மேன்-2 ஜேம்ஸ் பாண்டு தான் உலகையே காக்கும் போலி பிம்பகட்டமைப்பு வகையறா பார்ப்பன போலி பிம்ப கடட மைப்புமுழு பூச்சுற்றல் கதையே! முள்ளிவாய்க்கால் சம்பவ NEW NEWSERIES SERIES SEPTEMBER 20 இனப்படுகொலை rin ஈழ விடுதலை போராட்ட நிஜம் NEWS சுடவில்லையா? n am ஈழ போராளிகள் THE சரக்கு அடிப்பதை FAMILY நீங்கள் பார்த்து ஸவள்ளீர்களா WUNLDCSP கதாசிரியரே ? prime'

நிஜத்தில் ஒரு திவாரியை பார்ப்போம்
திரு என்.டி.திவாரி தான் யார் ?
*என்.டி.திவாரி, உ.பி., முதல்வராகவும், உத்தரகண்ட் முதல்வராகவும் பதவி வகித்தவர். மத்திய வெளியுறவு அமைச்சராகவும் இருந்தார்.
*ஆந்திர கவர்னராக இருந்தபோது, மூன்று பெண்களுடன் உல்லாசமாக இருந்தது தொடர்பான, “சிடி’ வெளியானதை அடுத்து, கவர்னர் பதவியிலிருந்து வெளியேறினார்.
ஐந்து ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த பிரச்னை . திவாரியே தந்தை:மரபணு சோதனை மூலம் நிரூபணமானது
ஈழத்தை ஈழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்கம் தொடருக்கு நிறைய இருக்கிறது .
ஐம்பது வருடமாக மேலாக நாட்டில் உள்நாட்டுப் பிரச்சினையாக இருக்கும் நக்சலைட், மாவோயிஸ்ட் பற்றி தொடர் எடுக்காமல் முடிந்து போன ஈழ பிரச்சினையை கொச்சைப்படுத்தும் நோக்கும் நிறையவே இருக்கிறது.
புத்திசாலி பார்ப்பனரை பேசவிட்டு பார்த்தாலே போதும் நிறைய பிசிறு தட்டும் ..எடுத்துக்காட்டு மதுவந்தி அக்கா மற்றும் YGP பத்ம சேஷாத்திரி பாலியல் குற்றசாட்டு கதைக்களமும் YG மஹேந்திரன் நடித்த நேர்மையான சினிமா கதாபாத்திர இரட்டை வேஷம் கதைதான் “பேமிலி மேன் -2 ” ..
டெல்லி மேலிடம் , மொசாட் உளவு நிறுவன மூளை என்று என்று மார் தட்டி கொள்ளும் பார்ப்பனர்கள் தான் நாட்டை காக்கிறார்கள் .
“பேமிலி மேன் -2 ஜேம்ஸ் பாண்டு இங்கிலாந்து உளவுத்துறை தான் உலகையே காக்கும் போலி பிம்ப கட்டமைப்பு வகையறா முழு பூச்சுற்றல் பொய் கலந்த போராளிகளை கொச்சைப்படுத்தும் கதையே!
போராளிகளை புரிந்து கொள்ள முடியாத ,புரிந்தாலும் புரியாத மாதிரி நடிக்கும் “பேமிலி மேன் -2 ” திரைக்கதை மற்றும் கதை எழுதிய ராஜ் மற்றும் DK இயக்குனருக்கு கதாசிரியருக்கு எமது கண்டனங்கள் ..
ஆந்திர மாநிலம் சித்தூரிலும் திருப்பதியில் வளர்ந்த ராஜ் மற்றும் DK இயக்குனருக்கு நக்சல் பிரச்சனை பற்றி யோசிக்காமல் ஈழ போராளி மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதி ஒரே தராசில் நிறுத்தி ஒன்றாக்கி வில்லனாக்கி
அதை பார்ப்பன சமூகம் வெற்றி கொள்ளும் பிம்ப கட்டமைப்பு கற்பனை கதை மூளையில் உதித்தது மனநோய் விகாரமே ! அவலமே ! காரிய செவிடு காரிய குருடு படைப்பு கோளாறே !
இது மோடி குஜராத் போலி என்கவுண்டர் திரைக்கதை அல்ல …
போராடி தோற்ற போராளிகளின் கதை ஈழ விடுதலை கதை !
பல அடக்குமுறைகள் , உயிரிழப்புகள் , பல தலைமுறை புத்தகம் கொண்ட தமிழ் நூலக எரிப்பு, அறப்போராட்டத்தில் உண்ணாநோன்பில் உயிர் நீத்த திலீபன் , இந்திய ராணுவ அத்துமீறல்கள் , காணாமல் போனவர்கள் , கண்டுபிடிக்க முடியாமல் தொலைத்தவர்கள் என்று பல வரலாற்றின் இருண்ட பக்கங்களின் முடிவில் “செய் அல்லது செத்து மடி” என்று போராடி தோற்ற போராளிகளின் கதை ஈழ விடுதலை கதை !
முள்ளிவாய்க்கால் சம்பவ
இனப்படுகொலை ஈழ விடுதலை போராட்ட நிஜம் சுடுகிறதா ?
சுடவில்லையா ?
ஈழ போராளிகள் சரக்கு அடிப்பதை நீங்கள் பார்த்து உள்ளீர்களா கதாசிரியரே ?
வரலாற்றை மறந்து உண்மையை திரித்து நேர்மை இல்லாத அறம் அற்ற இயக்குனரை கதாசிரியரை கண்டனம் தவிர என்ன சொல்ல ..
“Familyman2 “
அபத்தங்களை போலி பிம்ப கட்டமைப்பு உடைப்பை வரும் நாட்களில் விரிவாக அலசுவோம் !

Kasirajan A