பேசாதே ! ரகசியம் பேசாதே!

பேசணும் 24 மணி நேரமும் பேசணும் ..
அதுக்கு நீ நேர்லதாண்டா போய் பேசணும் !

Hacking in Technology makes edited or orchestrated Images, Audio and video to look real.
Is there any privacy ,secrecy, authenticity in any Social media ?

90ஸ் கிட்ஸ் கவனத்திற்கு … டெலிபோன் ஒட்டு கேட்கும் காலத்திலேயே அமெரிக்கா அதிபர் கிளின்டன் மோனிகா காதல் பேச்சை இஸ்ரேல் உளவு அமைப்பு மொசாட் அறிந்து இருந்தது .. பதிந்தும் இருந்தது ..

அமெரிக்கா அதிபர் பேச்சையே ஒட்டு கேக்கும் போது தனி நபர் ரகசிய உளவு சமாச்சாரம் சாத்தியம் இல்லையா ?

குறிப்பிட்ட சிலரின் டெலிபோன் பேச்சுக் களை ஒட்டு கேட்க தொலை தொடர்பு நிறுவனங்களின் உதவியை அரசு நாடும். தொலை தொடர்பு நிறுவனங்களின் உதவி இல்லாமலேயே இந்த வசதியை பெறுவதற்காக அரசு நிறுவனமான சி,டாட், மைய கண்காணிப்பு அமைப்பு என்ற தொழில்நுட்ப வசதியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் டெலிபோன் பேச்சுக்களை இடைமறித்து ஒட்டு கேட்பது, டேப் செய்வது, சமூக இணையதளங்களை கண்காணிப்பது போன்றவற்றை செய்ய முடியும்.

பிப் 2011 செய்திப்படி , ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு நிறுவனம் சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,”கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 1.51 லட்சம் டெலிபோன்களை ஒட்டு கேட்கும்படி அதிகாரிகள் எங்களுக்கு உத்தரவிட்டனர்’என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இதன்படி பார்த்தால், ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தால் மட்டும், ஆண்டுக்கு சராசரியாக 30 ஆயிரம் டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன.
நாள் கணக்கில் கணக்கிட்டால், ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தால் மட்டும் தினமும் 82 டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன.

அரசே உளவு பார்க்கும் 20 ம் நூற்றாண்டு ஜனநாயகம் இது .. ஆனாலும் ஊழலையும் கெட்டவனையும் கண்டுபிடிக்க அரசு திணறும்..

Individual Life and Liberty manifesto comedies ….. நம்பிட்டோம்டா !

எதுவுமே ரகசியம் இல்லை …

ரகசியம் வெளிவராமல் இருக்க மனதில் தான் இருக்க வேண்டும் .
பேசணும் 24 மணி நேரமும் பேசணும் ..ரகசியமா பேசணும் ..
அதுக்கு நீ நேர்லதாண்டா போய் பேசணும் !

– காசிராஜன்

https://www.dinakaran.com/News_detail.asp?Nid=28065

https://www.dinamalar.com/district_detail.asp?id=188929

Leave a comment