மணிப்பூர் கலவர சூத்திரதாரி பிஜேபியா?

#condemnmanipurviolence

#GoBackModi

இன்றைய 2023 மணிப்பூர் கலவரமும் , 77 நாட்கள் பிறகு வெளிவந்த நிர்வாண வீடியோ என்பது 2002 குஜராத் கலவர பில்கிஸ் பனோ வழக்கின் குற்ற பின்னணி சாயல் இருப்பது பிஜேபியின் பொறுப்பற்ற உண்மையான கோர முகம் வெளிவந்துள்ளது.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு , கூட்டாக 1000 பேர் வன்முறையில் கலவரத்தில் ஈடுபடுவது என்பது பிஜேபி அரசின் மீதான குற்றசாட்டு.

உலக நாடுகள் மத்தியில் மணிப்பூர் கலவரம் பிஜேபி மோடி, ஹிட்லர் முசோலினி வரிசையில் இடம்பெற்ற தலைவராக மாறிய தலைகுனிவு தருணம் இது.

கூட்டம்கூட்டமாக நடக்கும் வன்முறைகளில் மணிப்பூர் காவல்துறை வேடிக்கை பார்ப்பது ஏன்?

மணிப்பூர் காவல்துறை கூறும் “UNIDENTIFIED ” நபர்கள் என்ற பொறுப்பற்ற பதில்கள் அதிர்ச்சிக்குரியது.

கலவர இடங்களில் 77-78 நாட்கள் தொலை தொடர்பு சேவை நிறுத்தப்படுவது வதந்திகளை முடக்கவா அல்லது உண்மையை மறைக்கவா ?

சீனா, கியூபா,ரஷ்யா போன்ற தேசங்களில் பேச்சுரிமை இல்லை என்று வெறும் வாயில் அவள் மெல்லும் சங்கிகள் காஷ்மீர் பிரச்னை தொடங்கி இன்று வரை தொலை தொடர்பு சேவை நிறுத்தப்படுவது கண்ணில் காதில் கருத்தில் கூட விழாது

.

பிஜேபி பக்தர்கள் மணிப்பூர் கலவர சூழலில் சந்திராயன் மூன்று விண்வெளி ராக்கெட் மேலே போனது பெருமையா?

அல்லது

மணிப்பூர் கலவரத்தில் இந்தியாவின் மானத்தை கப்பலேறியது பெருமையா?

எதற்கும் சங்கிகள் பதில் சொல்லப்போவதில்லை . .

பிஜேபி தலைவர்கள் பலர் வாயை திறப்பது இல்லை .

கேட்டால் வேறு சம்பந்தமில்லாத பொறுப்பற்ற பதில் வரும் .

அன்றைய 2002 குஜராத் கலவரத்தில் ஜனாதிபதி அப்துல் கலாம் வாய் திறக்கவில்லை

இன்று 2023 மணிப்பூர் கலவரம் குறித்து ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினரும் ஆன திரௌபதி முர்மு வாய் திறக்கவில்லை.

காரணம் (பாஜக) பார்ப்பனியத்தால் கட்டுப்பட்டுள்ளார்கள்

நேற்று 2022 கோத்ரா குஜராத் கலவரம் – பிஜேபி செயல்படாத தன்மை

1984 சீக்கிய கலவரம் – காங்கிரஸ் செயல்படாத தன்மை

இன்று 2023 மணிப்பூர் கலவரம் பிஜேபி செயல்படாத தன்மை மற்றும் மெத்தன போக்கு

கலவர இடங்களில் கலவரக்காரர்களை ஒடுக்க முடியாமல் போனது என்று சொல்லப்பட்டாலும் கலவரங்களை நடத்தியது கட்சி அரசியலே என்ற குற்றசாட்டு உள்ளது.

நாளை நமது மாநிலத்தில் கூட நடக்கலாம்.

தேர்தல் அரசியல் செயல்படாத அரசை வன்முறைகளை மக்கள் சகித்து கொள்ளத்தான் வேண்டுமா? செயல்படாத அரசை மக்கள் திரும்ப பெற மக்கள்தான் புரட்சி நோக்கி நகர, யோசிக்க வேண்டும் !

கார்பொரேட் நலன் என்று கேட்டால் அதன்பொருட்டு இந்தியாவே அகதியாகும் நாளை அபாயகர சூழலை நோக்கி பிஜேபி தள்ளி கொண்டு இருக்கிறது.

சட்டஒழுங்கு சீர்குலைவுக்கு நீதிமன்றம் தானே முன்வந்து வழக்கை நடத்தி 2-3 வருடத்தில் முடிக்க வேண்டும் .

நீதி கிடைக்கு 5-10 வருடம் ஆகும்.

அதற்கு நீதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் நீதித்துறைக்கு பட்ஜெட் ஒதுக்கப்பட வேண்டும் .

இதற்கு நீதிமன்ற வழி 2022 குஜராத் கலவர

பில்கிஸ் பனோ நீதி என்றால் மக்கள் என்ன நம்பிக்கையில் வாழ்வார்கள் ?

மோடியே பதவி விலகு !

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் பதவி விலகு !

கலவரங்கள் தவிர்க்க முடியாது என்றால் மாற்றங்களும் புரட்சிகளும் தவிர்க்க முடியாது.

Kasirajan A

பில்கிஸ் பனோ வழக்கு பற்றி செய்திக்குறிப்பு

====================================

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் அங்கு மிகப் பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது.

கலவரத்தில் 700க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும் 250க்கும் மேற்பட்ட இந்துக்களும் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாகக் கூறப்பட்டு உள்ளது. உண்மையில் இதைவிட உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.

கலவரத்தில் நெஞ்சை உலுக்கும் வகையில் பல மோசமான சம்பவங்கள் அரங்கேறின. அப்படித்தான் கடந்த 2002இல் மார்ச் 3ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்பவரையும் அவரது குடும்பத்தினரையும் ஒரு கும்பல் தாக்கியது. அப்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கொடூரமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த அந்த கும்பல், அவர்களின் குடும்பத்தினையும் அடித்தே கொன்றது.

பில்கிஸின் இரண்டரை வயதுக் குழந்தையைப் பாறையில் மோத வைத்து கொலை செய்தனர். இதில் பில்கிஸ் பானு உடன் டிரக்கில் பயணித்த 14 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, கடந்த 2004ஆம் ஆண்டு குற்றவாளிகளைக் கைது செய்தது. வழக்கை விசாரித்த மும்பை செசன்ஸ் கோர்ட், கடந்த 2008இல் குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.

விசாரணைக் காலத்தையும் சேர்த்து 15 ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருந்தனர். இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவர் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகினார். விடுதலை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது தண்டனையை ரத்து செய்வது குறித்துப் பரிசீலிக்குமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இது தொடர்பாக முடிவெடுக்க பஞ்சமஹால் கலெக்டர் சுஜல் மயாத்ரா தலைமையில் குஜராத் அரசு குழு அமைத்து. இந்த குழு 11 குற்றவாளிகளையும் விடுவிக்கலாம் என்று குஜராத் அரசுக்குப் பரிந்துரை அளித்தது. அதன்படி அவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டு உள்ளனர். கேள்வி இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை விடக் குறைவான கொடூர குற்றத்தைச் செய்த ஏராளமான குற்றவாளிகள் எந்தவித நிவாரணமும் இன்றி தொடர்ந்து சிறைகளில் இருக்கும் நிலையில், இவர்கள் எதன் அடிப்படையில் ரிலீஸ் செய்யப்பட்டார்கள் என மனித உரிமை வழக்கறிஞர் ஷம்ஷாத் பதான் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், இதுபோன்ற முடிவுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்வதாகவும் அவர் விமர்சித்தார்.

Source: Tamilone India

Leave a comment