நட்சத்திரம் நகர்கிறது

பொதுவுடமைவாதிகளையும் அம்பேத்கரியம் பேசுபவர்களையும் ஒருவரையொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் நிலையில்தான் இந்த நட்சத்திரம் நகர்கிறது படம் பேசு பொருளாக உள்ளது…

கம்யூனிசம் vs அம்பேத்கரிஸம் = சித்தாந்தம் முரண்படாது
கம்யூனிஸ்ட் vs அம்பேத்கரிஸ்ட் => சித்தாந்தம் உள்வாங்கியவர்களின் பகைமுரண் முரணே !

சமணம் பெரிதா ? வைணவம் பெரிதா? என்று கழுவில் ஏற்றிக் கொல்லும் குற்றச்செயலுக்கு வழி சொல்லிய தத்துவவெறிதான் உள்ளது.

அன்பை போதிக்கும் கிறிஸ்தவம் உருவாக்கிய சிலுவை போர் உயிர் இழப்புகள்போல.

சிபிஐ பிரிந்து
சிபிஎம்

சிபிஎம் பிரிந்து
CPML
என பலபல காரணங்களுடன் பிரிவுகளாக
200 மார்க்ஸிச லெனினிய குழுக்கள் என்று முடிந்தவரை தனியுடைமை ஆகியுள்ளனர்.

கம்யூனிச அழித்தொழித்தல் நடவடிக்கை தவறு என்று CPM கட்சியை நம்பி தூக்குத்தண்டனை பெற்ற தோழர் தியாகு கூறிய விமர்சனம் சாதாரணமா ?

சிபிஐ கட்சியின் முன்னாள் தொழில்சங்க தலைவர் பொலிட்பீரோ உறுப்பினர் மத்தியில் எழுதப்படாத சட்டமாக தலித் சமூகத்தில் இருந்து
பொலிட்பீரோ உறுப்பினராக ஒருவர் வர முடியாது என்பதை விமர்சனமாகவும் வைத்துள்ளார்.

சாதி குறித்து சிபிஐ சிபிஎம் கடந்த 20 வருடமாக பாராமுகமாக இருந்துள்ளது என்பது அம்பேத்கரியம் அம்பை வைக்கும் முக்கிய குற்றசாட்டு..

ஏப்ரல் 2022 ல் வெளியான செய்தி
சிபிஐ(எம்) பொலிட்பீரோவில் முதல் தலித் உறுப்பினர்; வரலாற்று தருணம் அல்ல, ஏன்? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவில் தலித் ஒரு உறுப்பினராகியுள்ள நிலையில், இது வரலாற்று தருணமாக மாறாதது ஏன்?

சிபிஐ(எம்) இன் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான பொலிட்பீரோவின் முதல் தலித் உறுப்பினராக ராமச்சந்திர டோம், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சி தொடங்கப்பட்டு 58 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தலித் பொலிட்பீரோவின் உறுப்பினராகியுள்ளார். இருப்பினும், கட்சிக்கு இது ஒரு “வரலாற்று தருணம்” ஆக அமையவில்லை. மாணவர் அரசியலின் மூலம் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய 63 வயதான ராமச்சந்திர டோமின் கூற்றுப்படி, தலித் சமூகத்தைச் சேர்ந்த “பல உறுதியான தலைவர்கள்” கட்சியில் உள்ளனர்.
“எங்கள் கட்சியில், எந்த ஒரு நபரும் சில செயல்பாடுகள் மூலம் தலைவராகிறார். இது ஒரு தொடர்ச்சியான செயலாகும். எங்கள் கட்சியின் வரலாற்றில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பல தலைசிறந்த தலைவர்கள் இருந்தனர். எப்படியோ அவர்கள் பொலிட்பீரோவில் இடம்பெறவில்லை… எனவே, நான் பொலிட்பீரோவில் நுழைந்தது ஒரு வரலாற்றுத் தருணம் அல்ல,” என்று ராமச்சந்திர டோம் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

மார்க்ஸிசம் , லெனினிசம் , கம்யூனிஸ்ட் என்றாலே முழுக்க முழுக்க நூறு சதவீதம் அக்மார்க் நல்லவர் மற்றும் சரியான பாதையில் செல்பவர் .
அம்பேத்கரிஸ்ட் என்றாலே முழுக்க முழுக்க நூறு சதவீதம் அக்மார்க் நல்லவர் செல்பவர்
மற்றும் சரியான பாதையில் செல்பவர் …

ஒரே கோட்டில் பயணிக்க வேண்டிய அம்பேத்கரியம் மற்றும் பொதுவுடைமை பேசுபவர்களும் வெவ்வேறு திசையில் சண்டையிட்டுக் கொள்வது வருத்தமளிக்கிறது.

யாரேனும் ஒருவர் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்து செல்வது தான் சனாதனத்தை வேரறுக்க வறுமையை வேரறுக்க சமத்துவத்தை நோக்கி செல்வதுதான் இப்போது இருக்கும் தீர்வு.

பேசித் தீர்த்துக் கொள்ளும் அளவிற்கு பொறுமையும் நிதானமும் இரு தரப்பினரிடமும் மாற்று கருத்தை ஏற்றுக்கொள்ளவோ பேசி தீர்க்கவோ இருக்கும் நிலையில் இல்லை. மாற்றுக்கருத்தை திணிக்கும் பிடிவாதம் தான் கம்யூனிஸ்ட் மத்தியில் உள்ளது.

நிறைய முரண் கருத்துக்களுடன் , பேச்சில் திறமைசாலிகளாக , வறட்டு பிடிவாதம் கொண்டஇரு தரப்பும் இருப்பது வருத்தத்திற்குரியது.
பேசித் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை இரு தரப்புக்கும் சுத்தமாகவே இல்லை

நட்பு முரண் உடன் பயணிக்க வேண்டிய அம்பேத்கரிஸ்ட் , கம்யூனிஸ்டுகளும் பகைமை கொண்டு தான் சண்டை போட்டுக் கொள்வதை 4-5 வருடமாக தனிப்பட்ட முறையில் பல்வேறு கட்செவிக் குழுக்களில் பார்த்துள்ளேன்.
ஒருவர் மீது ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை வைத்து ஒரு புள்ளியில் இருந்து சமாதானத்தை நோக்கி நகர மறுக்கின்றன.

ஒருவரை ஒருவர் வர்க்க ரீதியாகவும் , சாதி வன்மம் கொண்டவர்களாகவும் குற்றம் சாட்டிக் கொள்வதை கண்கூடாகக் காணமுடிகிறது.

யார் தரப்பு சரி என்று சொல்வதை விட விமர்சனங்களை எடுத்து கொண்டு அடுத்த கட்ட நகர்வை நோக்கி நகர்வது தான் நட்சத்திரம் நகர்கிறது ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கருத்து .

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல சாதியம் பேசுவோருக்கு இந்த சண்டை வெறும்வாய்க்கு சிறப்பான அவல் ….

ரஞ்சித்தை விமர்சிக்கும் அளவிற்கு சாதியை தூக்கிப் பிடிக்கும் முத்தையா,மோகன்ஜி போன்றவர்களையும் சாதிய அரசியல் பொய்யை படமாக்கியிருக்கும் அபத்தத்தை மற்றும் தோல்விகளையும் விமர்சிப்பதில்லை…

“நட்சத்திரம் நகர்கிறது” நிஜத்தை புரிந்து கொண்டு விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு பேசி சண்டையிடுவதை மட்டும் காரியமாக கொண்டு இல்லாமல் செயல்படும் பாதைக்கு திரும்புவார்கள் என்று நம்புவோம் !

  • காசிராஜன்

Leave a comment