உத்தரபிரதேச இரட்டை பார்ப்பனதன்மையும் தமிழ்நாடு பேசும் அறமும் !

1991-ல் உத்தரப்பிரதேசத்தில் பாஜக முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது. உ.பி.முதல்வராக கல்யாண்சிங் பதவியேற்றுக் கொண்டார். 1992-ம் ஆண்டு கல்யாண் சிங் முதல்வராக இருந்தபோதுதான் உத்தர பிரதேசத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஆட்சிக் காலத்தில்தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பாபர் மசூதி இருந்த இடத்துக்கு அருகே 2.77 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.


1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதியை இந்துத்துவா தொண்டர்கள் இடித்து தரைமட்டமாக்க தேசம் எங்கும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பாபர் மசூதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்த கல்யாண்சிங், பாபர் மசூதி இடிப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.

======================

நாகரிகம் கருதி கூட இழந்த பிஜேபி தலைவர் கல்யாண் சிங் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க மனம் மறுக்கிறது ! அரசியல் ஆதாயத்திற்காக தெரிந்தே குற்றம் செய்தவர்கள் மீது குற்றத்திற்கு நேரடி மறைமுக காரணமாக இருந்தவர் மீது என்ன சபை நாகரீகம் மிஞ்சி இருக்கும் ?

இரங்கல் தெரிவித்தால் பாபர் மசூதி கலவரத்தில் இறந்தவர்கள் ஆன்மா மன்னிக்குமா ? என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது !

இருந்தும் அறம் காரணமாக முழு மாற்றுக்கருத்து இருந்தாலும் தலைவராக இல்லாமல் ஒரு மனிதன் இறந்ததற்காக இரங்கல் சொல்ல கடமைப்பட்டு உள்ளோம் !


உத்தரபிரதேச அதிக பார்ப்பன மக்கள்தொகை பிஜேபி எனும் குற்ற பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் அரசு அமைக்க காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது!விகாஸ் துபே போன்ற குற்றவாளிகள் கைது செய்ய வந்த காவல்துறை மீது துப்பாக்கிசூடு நடத்தில் பாலி ஏற்படுத்தினாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்கவுண்டர் தவறு என்று போராட்டம் நடத்திய பார்ப்பன சங்கங்கள் இன்றைக்கு மனுதர்ம நோய் முற்றியதற்கான சான்று !

ராமர் கோயில் வன்முறை ரதயாத்திரை வன்முறை பாபர் மசூதி இடிப்பு கலவரம் குஜராத் கலவரம் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் என்று அத்வானி, கல்யான் சிங் ,அமித் ஷா, மோடி என்று குற்றங்களே அதிகம் பிஜேபி முகங்களாக இருக்கின்றன ..

60-70 வருடம் ஆண்ட காங்கிரஸ் குற்றப்பின்னணி கொண்டவர்களை தண்டனை கொடுக்காமல் தண்டனை கொடுக்க முடியாத செயல்படாத பண்ணையார் வழி அரசாங்கம் நடத்தியதால் மத்திய அரசாங்கம் குற்றவாளிகள் கையில் தான் நாடு இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. தள்ளப்பட்டுள்ளது … இன்றைய குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் 33+ சதவீதம் பேர் ஜெயிலுக்குப் போகாமல் சட்டமன்றம் பாராளுமன்றம் செல்கின்றனர் .சட்டம் இயற்றுகின்றனர் ..ஊருக்கு நாட்டாமை சொல்கின்றனர்.

குற்றவாளிகள் 30+ சதவீதம் நாடாண்டால் , நாடு எந்த நிலைக்கு செல்லும்?


பக்கத்து மாநிலத்தில் தானே நடக்கிறது என்று அசட்டையாக இருந்தால் அது கேன்சர் நோய் போல பரவி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு , நீட், ஐயப்பன் கோவில் பெண்கள் ஆலய நுழைவு ,கௌவெறி பிரச்சனை என்று தமிழ்நாடு மற்றும் கேரளா கர்நாடகா எல்லாவற்றையும் பாதிக்கிறது..
தமிழ்நாடு இந்திய அரசியல் பேசும்! செயலாற்றும் !
முக்கிய மையமாக மாறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை..
வடக்கு தேய்கிறது ! தெற்கு தலை நிமிர்ந்து அறம் பேசுகிறது.. பேசிக்கொண்டே இருக்கும்

Kasirajan A

Leave a comment