ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்கும் 25% மக்கள்

முதற்கட்ட தேர்தலில் 74.37 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல்.. 73.27% வாக்குகள் பதிவு


சுதந்திரமடைந்து 70 வருடம் கடந்தும் தேர்தல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத மக்கள் 25 சதவீதம் பேர் இருப்பதுதான் ஜனநாயகத்தின் வெட்கக்கேடு மற்றும் தோல்வி..
சாலை என்றும் குண்டும் குழியும் ..
சொந்தக்காரர்களுக்கு காண்ட்ராக்ட் கொடுப்பது சாதி சமூகத்தை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றிபெறுவது
ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரும் தன் இனத்தையே காசுக்காக விற்பது விலை போவது என்று பல நாடகங்களை எழுபது வருடத்தில் மக்கள் பார்த்து விட்டார்கள்.
எவ்வளவு முக்கினாலும் 70 லிருந்து 80 சதவீதத்தை எட்டுவதற்கு நாக்கு தள்ளுகிறது..
யார் வந்தாலும் எனக்கு என்ன ? என்ன பிரயோஜனம் என்ற எண்ணம் பெரும்பான்மை மக்களுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை ..
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்கும் மக்கள் பொறுமையை ரொம்ப சோதித்தால் புரட்சி வருவதை தடுக்கவும் முடியாது.
தேர்தல் ஜனநாயக நாடகம் எத்தனை நாளைக்கு தாங்கும் ?


Kasirajan A

https://tamil.oneindia.com/news/chennai/73-27-votes-were-cast-in-the-second-phase-of-local-body-elections-held-in-9-districts-in-tamilnadu/articlecontent-pf603224-435326.html

Leave a comment