ஜெய் பீம் சில காட்சிகள் நினைவலை!

ஜெய் பீம் !
===========


இந்த திரைப்படத்தை ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இருளர் சமுக மக்கள் அனைவரும் ott தளத்தில் கான்கிரீட் வீட்டில் சொந்த தொலைக்காட்சியில் பார்க்கும் நாள் வரை இந்திய சமூக அமைப்பு மாறும் நாள்வரை இந்தியா பின்தங்கிய நாடே!

10 நாட்களில் போலீஸ் அவசர அவசரமாக கடமை ஆற்றுபவர் , பல வருடமாக கடமை ஆற்றாத வழக்கு தேக்கம் ஏன்?

நாம் சாதியை 2000 வருடமாக சுமந்து கொண்டு இருக்கிறோம் !

வலிகளும் இழப்புகளும் தான் சங்கங்களை தோற்றுவிக்கிறது.. பல வலிகள் காயங்கள் உயிரழப்பு 1996 வருடம் இருளர் சங்கத்தை தோற்றுவித்து பல பொய் வழக்குகள் மீது சட்டப்போராட்டம் நடத்தி தங்களுக்கு தாங்களே அடுத்த கட்டம் எடுத்து செல்லும் சமூக சூழல்.

ரேஷன் கார்டு இல்லாதவங்க வழக்கை யார் எடுப்பாங்க..

எந்த சாதியில் குற்றாவளிகள் இல்லை.

அரசு தரப்பு வழக்கறிஞர் எப்படி மக்களுக்கு எதிராக எதிரியாக செயல்படும் என்ற உலகத்தை கண்முன்னே காட்டிய படைப்பு !

வழக்கை ஜோடிக்கும் காவல்துறை !
மக்களை காக்க வேண்டிய காவல்துறையே குற்றம் செய்தல் அதற்கு அதிகார வர்க்கமும் துணை போதல் !

பல தடவை செட்டில்மெண்ட் பேசும் காவல்துறை மற்றும் நீதித்துறை புரோக்கர் பலர் !

நீதி கிடைக்க எவ்வளவு வலிகள் தாண்டி செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் எதார்த்தம் !

அதிகார வர்க்கம் ஊர் பிரசிடென்ட் இருளர் இனத்தை சேர்ந்தவர்களை பாம்பு பிடிக்கும் சூழலில் ஆபத்தின் போது கூப்பிடும் போதும் காரியம் முடிந்த பிறகு சாதி சமூகத்தின் முகத்தை காட்டு போதும்

எலிகள் பிடிக்கும் விவசாயக் கூலியாக
எலிகளுக்கும் ஜீவகாருண்யம் பார்ப்பதும் பாம்புகள் பிடித்து கொல்லாமல் ஜீவகாருண்யம் பார்ப்பதும்
எளிய இருளர் சமூக மக்களாக ஆதி பொதுவுடைமை சமூக சாயல்கள் பல.

இருளர் இனத்தை சேர்ந்தவர்களை ஆபத்தின் போது கூப்பிடும் போதும் காரியம் முடிந்த பிறகு சாதி சமூகத்தின் முகத்தை காட்டுவதும்
ஒரே ஊர் எனும் போது உங்கள என்னைக்கு ஊருக்குள்ள உங்களை விட்டு இருக்கோம்.. எனும் மேட்டிமைத்தனமான சமூக வார்த்தை.

மேலிட அழுத்தம் என்று 4-5 அப்பாவிகளை செமையாக அடித்து உதைத்து திருட்டை செய்யாதவனையும்
செய்ததாக ஒப்பு கொள்ள வைக்கும் உப்புக்கு பெறாத காவல்துறை தந்திரம் மற்றும் கையாலாகாததனம் !

4.33 Lakh Prisoners – Dec 31 2016 NCRB statistics

இந்திய சிறைகளில் உள்ளவர்களில் 67 சதவீதம் பேர் விசாரணை கைதிகள்
சிறைகளில் விசாரணை கைதிகளாக உள்ள பெண்கள் சிறையில் பிரசவித்த ஆயிரத்து 942 குழந்தைகளும் இந்த புள்ளிவிவரத்தில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. #NCRB#Prisoners#Undertrials

சுகந்திரம் அடைந்து 70 வருடம் கடந்தும் இன்னும் வீடு வாசல் இல்லா நீதி நியாயம் மறுக்கப்பட்டு போராடும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ….
இந்த தீபாவளி ஜெய் பீம் படம் பலரின் மனதை சலனப்படுத்தும் சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் மனதை உலுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எளியோருக்கு நீதி கிடைக்கும் நாள் வரை
சமமாக வாழும் வாழ்வு கிடைக்கும் நாள் வரை
நாமிருக்கும் சமூகத்தை சீர்திருத்தும் பாதையை செப்பனிடும் பணியை சிந்திப்போம்!

Kasirajan A

Leave a comment