தம்பி என்ன சமூகம்? கேள்வி தேவையோ?

ஊர்ல நட்பு வட்டத்தில் ஏதேனும் ஒரு வயதில் மூத்தவர் அல்லது முதியவர் கேட்பது
“தம்பி என்ன சமூகம் !
தம்பி என்ன வர்ணம் !
தம்பி நம்ம சாதியா ! “
இதெல்லாம் எளிதாக கடந்து போகவும் முடியவில்லை.
கசப்பான அனுபவமாக ஜீரணிக்கவும் முடியவில்லை…
ஒரு டீ அல்லது காபி குடித்த கடனுக்காக சாதி அடையாள பதில் சொல்ல வேண்டுமா என்ன!


இதற்காகவே பலரின் வீடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டி உள்ளது.
அப்படியே கேட்டாலும் சொல்ல வேண்டிய பதில் !
சொல்லிய பதில்!
சாதி கேட்டு என்ன பண்ண போறீங்க …
சாதி தெரியாம வீட்டு கூடம் வரைக்கும் கூப்பிட்டு வந்துடீங்களா !
தீட்டு பார்ப்பீங்களோ !
வேற டம்ளர்ல டீ தருவீங்களோ!
நான் மனுஷ சாதிங்க ! நான் தொழிலாளி வர்க்கம்க !
அப்பா இல்லாமல் வளர்ந்ததால் வீடு வாசல் இல்லாமல் வளர்ந்ததால் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்த்தவன் என வாழ்கிறேன். நான் ஆதிக்க சமூகம் அல்ல
என் வீடு முகவரி மீனவர் காலனி என்றே சொல்கிறேன். நீங்களே முடிவு பண்ணிக்கோங்க ..
தவிர்க்க முடியாத இடங்களில் நகைச்சுவையாக
எனக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் இருக்காங்க.
எனக்கு இப்பவே 7 கழுதை வயசு ஆகுது இனிமேல் சாதி பார்த்து சொத்துடமை பார்த்து பொண்ணு தர போறீங்களா? என்ன ?
அப்படியே சாதி கேட்டு சமூக நீதியை நிலைநாட்ட போறீங்களா என்ன ? போங்க சார் ..
பழகிய பழக்கத்திற்காக திட்டாமல் கடும்சொல் சொல்லாமல் வயதிற்கு மரியாதையை கொடுத்து திரும்ப வேண்டி உள்ளது..
பெரியவர்கள் பெரியவர்களாக நடந்து கொண்டால் நாங்கள் சின்ன பசங்களாக நடந்து கொள்கிறோம்!
இதுக்காகவே நட்பு வட்டத்தை பொது இடங்களில் டீ கடைகளில் கோவில் அல்லது பார்க் அல்லது தெருமுனையில் சந்தித்து கொள்வதோடு நிறுத்தி கொள்கிறேன்.
பழக்க வழக்கம் எல்லாம் தெருவோடு பொது இடத்தோடு நிறுத்தி கொள்ளலாம் என்றே யோசிக்க தோன்றுகிறது!
கசப்பான அனுபவமாக சென்னை NGO களில் சாதி என்ன ? குலதெய்வம் என்ன என்று கேட்கும் வழக்கம்
நியாபகமாக கடந்து செல்கிறது ..
மென்பொருள் நிறுவனங்களில் சாதி Surname என்ன ? மீசை மழிக்கப்பட்டு உள்ளதா ? வீடு முகவரி மயிலாப்பூர் நங்கநல்லூர் நியூ பெருங்குளத்தூர் ? resume ல hobbies பரத நாட்டியம் , லயன்ஸ் கிளப் , KV
பள்ளி , பத்மசேஷாத்திரி பள்ளி மேட்டிமைத்தனம் இருக்கிறதா என்ற மோப்பம் பிடிக்கும் செயல்கள் தனிக்கதை.
சென்ற வாரம் தான் சாதியம் பேசும் IT உலகம் பற்றி கிளப் ஹவுஸ் விவாதம் பேசியது நினைவுக்கு வந்து போனது.
ரொம்ப நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது..
வயதில் மட்டும் பெரியவர்கள் பலரோடு கசப்பான அனுபவங்களோடு …
“இப்ப எல்லாம் யார் சார் சாதி பாக்குறாங்க? “
“சாதி சான்றிதழ் கிழிச்சிட்டா சாதி ஒழிஞ்சிடும் “

Kasirajan A

Leave a comment