பாமக குற்ற பின்னணி அரசியல் – கடந்த கால நிர்வாகிகள் உயிரிழப்பு அரசியல் உணர்த்துவது என்ன ?

கட்சிக்கு ஓட்டு வாங்கி தர முடியவில்லை என்றால் மாடு மேய்க்கும் சிறுவன் தான் மாவட்ட, ஒன்றிய பொறுப்புகளுக்கு நியமிக்க வேண்டி இருக்கும்” என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

இதே காட்டமான கேள்வியை பாராளுமன்றம் செல்லாத மகனை பார்த்து கேட்பாரா ?

நிர்வாகி வேலையே மாடு மேய்க்கும் சிறுவனிடம் ஒப்படைக்க வேலை திட்டம் போடும் மருத்துவர் அய்யா , பல ஆண்டாக முதல்வர் கனவில் ஜெயிக்க முடியாத அன்புமணிக்கு, பல நாட்கள் பாராளுமன்றம் செல்லாமல் லீவு லெட்டர் கொடுத்த அன்புமணிக்கு என்ன வேலை கொடுப்பீர்கள்? அல்லது
அன்புமணி அவர்களுக்கு முதல்வர் பதவி தான் 2 மருத்துவ கல்லூரி முறைகேடாக அனுமதி வழங்கியதாக லஞ்சம் சிபிஐ வழக்கில் இருந்து காப்பாற்றும் என்று மருத்துவர் ஐயா நம்புவது தான் கடுகடுப்புக்கு காரணமோ..

சீமான் ஆடுமேய்ப்பதை அரசு வேலை ஆக்குவேன் என்றார்.
மருத்துவர் அய்யாவோ ஆடு மாடு மேய்த்து அரசு பதவியில் இருக்க போறவரை வட்டம் மாவட்டம் நிர்வாகி பதவி கொடுப்பேன் என்று மாடு மேய்க்கும் சிறுவர்களை மனம் நோகும் படி பேசி உள்ளார்.

குற்ற பின்னணி அரசியல்ஆடு மாடு மேய்த்து செய்யும் முட்டு கொடுக்கும் பா ம க பதவியை விட மாடு மேய்ப்பதை பெருமையாக நினைக்கிறோம் என்றே பலர் சொல்வார்கள்.
பல உயிர் இழப்புகளை சந்தித்த பலியாடு பாமக நிர்வாகியாக இருப்பதற்கு மாடு மேய்த்து குடும்பத்தை காப்பாற்றுவதே மேல் என்றே சொல்லலாம்.

அப்பாவி சிறுவர்களை அழைத்து பா ம க நிர்வாகி பதவி கொடுத்தால் குற்ற செயல் புரியும் சூழல் உள்ள சாதி அரசியல் பேசும் பதவி தேவையா ? சிறார் குற்றாவளிகள் உருவாவதை தடுக்க குற்றவாளிகளாக வழிதவறும் அரசியல் விழிப்புணர்ச்சி வேண்டும் .

திரு ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் !
5 கோடி நஷ்டஈடு கேட்டு எல்லா சாதியை சேர்ந்த மாடு மேய்ப்போர் விவசாய சமூகம் திரும்பும் என எச்சரிக்கிறோம்.

மனிதர்கள் வகிக்க கூடிய பதவியா பா ம க நிர்வாகிகள் பதவி!

தெரிந்த வரை சில உயிரிழப்புகளை பட்டியல் இடுவோம் .

1) 1998 ஆண்டு சிதம்பரம் மதிமுக நிர்வாகி பழனிவேலு கோர்ட் அருகே கொல்லப்பட்ட நிகழ்விற்கு பிறகு தியேட்டர், பண்ணை என்று சூறையாடிய நிகழ்ச்சிகள் பிறகு சாட்சிகள் பல்டி என சாட்சிகள் பல்டி பா ம க சொந்த சாதி பாச அரசியல் மக்களுக்கு புரியட்டும்.

2) November 3, 2014 நாட்டு வெடிகுண்டை வீசி நிலைகுலைந்த மாநில வன்னியர் சங்க துணைத்தலைவர் கே.ஏ.மூர்த்தியை மர்ம நபர்கள் அரிவாளால் முகம் மற்றும் உடலில் பல இடங்களில் வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். கொலை! பா.ம.க. மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் க. அகோரம் நீதிமன்றத்தில் சரண்!

3) 2015 ஆண்டு பா ம க மாநில துணை தலைவர் MK ஸ்டாலின் வழக்கறிஞர் தம்பி தஞ்சாவூரில் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்ச்சிக்கு பிறகும் அதன் எதிர்வினை கொலை குற்ற செயலுக்கு பிறகும் நிர்வாகிகளாக இருக்க யாருக்கு விருப்பம் இருக்கும்..

வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய சொந்த கட்சிக்காரரே நிதி உதவி செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வன்னியர் சங்க மாநில துணை ம.க.ஸ்டாலினை கொலை செய்ய நான பேர் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதை அறிந்த ம.க.ஸ்டாலின் கால்விலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இவரின் புகார் அடிப்படையில் போலிஸார் கொலை செய்ய திட்டமிட்டவர்கள் மற்றும் இவர்களுக்கு நிதியுதவி செய்த பா.ம.க மாநில நிர்வாகி வெங்கட்ராமன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொலை திட்டம் தீட்டிய நான்கு பேரை கைது செய்த போலிஸார் அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற் கொண்டு வருகிறார். மேலும், எதற்காகக் கொலை திட்டம் தீட்டப்பட்டது என்பது குறித்து அவர்களிடம் விசாரணைநடத்தப்பட்டு வருகிறது.

4) 6 Feb 2019 ,கும்பகோணம் அருகே, திருப்புவனத்தில், ஹிந்துக்களை, முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டவர்களிடம், அவர்களின் செயலை கண்டித்து பேசிய, பா.ம.க., முன்னாள் நிர்வாகி ராமலிங்கம், வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

5) 2021 பண்ருட்டி மேல்மாம்பட்டு பாமக நிர்வாகி கோவிந்தராசு அடித்துக் கொலை.. கடலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளர் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள்..

6) அக்டோபர் 22 2021,காரைக்காலில் பாமக மாவட்ட செயலாளர் தேவமணி என்பவர் கூலிப்படையினரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.

7) 2000 ஆண்டு , தர்மபுரி பஸ் எரித்து வேளாண் கல்லூரி மாணவிகள் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த முனியப்பன், நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகிய 3 பேரை வன்னியர்கள் தான் பேருந்தை கொளுத்தினார்கள் என்று பொதுக்கூட்டத்தில் வீரமாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த காடுவெட்டி குருமூர்த்தி பொய் சொல்லவில்லை என்றே நம்புகிறோம்..
சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் 2007 டிசம்பர் 5-ம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் 25 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

8) வி.ஜி.கே.மணி, காடுவெட்டி குரு இவருக்கு சின்னமாமனார் முறையானவர் …
இவர் கொடுத்த பேட்டி பின்வருமாறு

கட்சியை விட்டு நீக்கிய பின் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் நான் அசரவில்லை, நான் குருவின் ரத்தமாச்சே.
பேராசிரியர் தீரன் ஆண்டிமடம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது பா.ம.க.வை விமர்சனம் செய்தார். அப்போது தீரனை தொகுதிக்குள்ளேயே வரவிடாமல் தடுத்ததோடு, அவரை கொலை செய்ய வேண்டும்! என்று காடுவெட்டி குருவுக்கு கட்டளையும் இட்டார். ஆனால் தீரன் மேல் இருந்த நட்பினால் வெடிக்காத மாதிரி குண்டை தனது ஆட்கள் மூலம் வீச வைத்து அவரை தாக்குவது போல் எஸ்கேப் பண்ணிவிட்டார் குரு. இந்த விவகாரத்தை பலர் அறிவார்கள். வாழப்பாடியாரின் தலையை வெட்டி வீசச்சொன்னார் ராமதாஸ். அவர் சொன்னதாலேயே குருவும் அப்படி அறிவித்தார். அரசியல் லாபத்துக்காக டாக்டர் ஏவிவிட்டதற்கெல்லாம் குரு பலிகடாவானார். கருணாநிதி, ஜெயலலிதா எல்லோரையும் டாக்டரின் உத்தரவின் பெயரிலேயே குரு கடுமையாக விமர்சனம் செய்தார். டாக்டர் ராமதாஸின் சகோதரர் ஒருவர் சாதி மாறி திருமணம் செய்தார். சொந்தத் தம்பியையே கொலை செய்ய கிருவை ஏவினார் டாக்டர். ‘நம்ம குடும்பத்துக்குள்ளேயே வேண்டாம்யா!’ன்னு தடுத்தவர் குருதான். அதேமாதிரி அறிவுச்செல்வன், மயிலாடுதுறை மூர்த்தி, சி.வி.சண்முகத்தின் உதவியாளர் அனந்தராமன் சகோதரர் ரகு ஆகியோரின் மரணங்களுக்கு பின்னணியில் இருக்கும் சதியும் எனக்கு தெரியும். அதனால் என்னை கொல்ல சதித்திட்டம் போடுகிறார்கள். நான் எந்த பூச்சாண்டிக்கும் பயப்படும் ஆளில்லை. என் உயிருக்கு ஆபத்து என்றால் அதற்கு ராமதாஸும், அன்புமணியும்தா பொறுப்பு.” என்று வார்த்தைக்கு வார்த்தை பதறவிட்டிருக்கிறார்.

பல பக்கம் எழுத வேண்டும் சொந்த கட்சி பா ம க நிர்வாகிகள் பலியாடுகள் ஆன கதைகளை..

பொது சமூகத்திற்கு பாமக குற்ற பின்னணி அரசியல் பற்றி விழிப்புணர்ச்சி வேண்டும் !
Kasirajan A

Leave a comment