குற்றம் நடந்தது என்ன ? குற்றம் என்ன ? பத்தாம் வகுப்பு ஆசிரியரிடம் ஒரு கேள்வி ?

இன்றைய 2022 கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி தற்கொலை விவகாரம் !

ஒரே பள்ளியில் நிகழ்ந்த 5 மரணங்கள்!

மாணவியின் பெற்றோர்கள் தங்கள் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறி போராட்டம் நடத்தி வந்தனர் . 4 நாட்களாக அமைதியான முறையின் மாணவியின் உடலை வாங்க மறுத்துக் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், வன்முறையாக வெடித்துள்ளது.

ஆயிரக்கணக்கானோர் கூடிய நிலையில் பேரணி , காவல்துறையினர் மீது கல்வீச்சு தாக்குதல். விழுப்புரம் சரக டிஐஜி உள்ளிட்ட ஏராளமான காவலர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை, பள்ளி வாகனங்களை அடித்து நொறுக்கியது, 20க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்து எரித்துள்ளனர்.

நீதி, உண்மை நோக்கிய குரல்கள் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது !

இன்னொரு நீர்த்து போன சம்பவம் …

வருடம் 1997-98
சிதம்பரம் நிர்மலா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி
பத்தாம் வகுப்பு ஆ பிரிவு ..

கிளாஸ் டீச்சர் . இந்த வருட சிலபஸ் எங்கே .

சிலபஸ் கொடுக்கப்பட்டது ! அந்த வருடம் மெட்ரிக் படத்திற்கு புது பாட புத்தகம் கொடுக்கப்பட்டு இருந்தது.

கிளாஸ் டீச்சர் : என்ன இது ? 8 chapter பிசிக்ஸ் – I term போட்டு இருக்கு.

I term – 8 chapter
Quaterly (காலாண்டு )
II term
Half yearly (அரையாண்டு)

மொத்தம் 80 சதவீதம் மேல் என்பது ஆச்சரியம் ஏற்படுத்தியது வியப்பில்லைதான் .ஆனால் அதன் பின் நடந்தது இன்று வரை வியப்பும் அமானுஷயம் கலந்த

மாணவர் : இன்னும் 2 chapter சேர்த்து இருந்தா சிலபஸ் முடிஞ்சு இருக்கும் என்று அடுத்த நொடி நடக்க போகும் சம்பவம் பற்றித் தெரியாமல் .

கிளாஸ் டீச்சர் : என்ன சொன்ன ?

மாணவர் : இன்னும் 2 chapter சேர்த்து இருந்தா சிலபஸ் முடிஞ்சு இருக்கும். என்று அப்பாவியாக

கிளாஸ் டீச்சர் : என்ன சொன்ன ?

அதற்கு அப்புறம் 7-8 அறை மாணவனுக்கு விழுந்தது
நீ என்ன சொன்ன ? உனக்கு என்ன திமிர் . நீதான் syllabus தயாரிக்கிறாயா ? நீ எப்படி சொல்லலாம் .

என்று சொல்லி கொண்டே கன்னத்தில் சரமாரியாக மாணவனுக்கு அடி விழுந்தது .

மாணவனின் கண்ணாடி பறந்து விழுந்தது. பிறகு கண்ணாடியைக் கழட்ட சொல்லிக் கன்னத்தில் அறை.
ஒரு 20க்கு மேற்பட்ட அறை விழுந்து இருக்கும்.

ஆனால் காரணம் .சொற்ப காரணம் கூட இல்லை.

இன்னும் 2 chapter சேர்த்து இருந்தா சிலபஸ் முடிஞ்சு இருக்கும்.

இதற்கா அடி …

அடுத்து. இனிமேல் நீ இவன் பக்கத்தில் உட்கார கூடாது என்று வேறு இடத்தில் உட்கார வைத்தார்கள்.
அதற்கும் இந்த வேறு இடத்தில் உட்கார சொன்ன சம்பவத்திற்கும் என்ன காரணம்

இன்று வரை காரணம் புரியவில்லை…

இந்த ஆட்டோ கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடும் காமெடி செய்திபோல.. தனித்தனியே உட்கார வைத்த நிகழ்வு இன்னும் காரணம் புரியவில்லை…

தவறு ஏற்படும்போது.
ஒரு ஆசிரியரும் மாணவரும் ஒரே தராசில் வாதி பிரதிவாதியாக நிறுத்தப் படுவதில்லை.

ஒரு ஆசிரியர் மாணவரை குற்றம் சாட்டலாம் அடிக்கலாம் மனஉளைச்சலில் வைத்து இருக்கலாம்
ஆனால் ஒரு மாணவர் ஆசிரியரின் தவறை எளிதாகச் சுட்டி காட்ட முடியுமா என்ன ?

நீ என்ன தவறு செய்தாய் ஆசிரியர் அப்படி அடிக்க ! என்ற கேள்வியைக் கடக்காமல் இருக்க முடியுமா ?

அதை ஆசிரியர் தான் சொல்ல வேண்டும்.. இன்னைக்கும் காரணம் புரியவில்லை.

இன்னொரு மாணவன் +1 +2 தொடர்ந்து காழ்ப்புணர்ச்சி காரணகமாகவே

அந்தச் சமபவத்திற்கு பிறகு அந்த வருடத்தைக் கடந்து அடுத்த வருடத்தை அதே பள்ளியில் படிக்க விருப்பம் இல்லாமல் வேறு பள்ளியில் +1 +2 படித்தது எல்லாம் சம்பவத்தால் எடுக்கப்பட்ட முடிவுகளே !

வகுப்பில் யார் பேசினாலும்! _ முருகன்(பெயர் மாற்றப்பட்டுளளது)உன் சத்தம் அங்க டீச்சர்ஸ் ரூம் வரைக்கும் கேட்குது என்று அடிக்கடி தீர்ப்பு எழுதித் தண்டனை கொடுத்து உள்ளீர்கள் . (நல்ல வேளை நான் வேற பள்ளியில் படித்தேன் இல்லன்னா தினமும் அறை வாங்கி இருக்க நேரிட்டு இருக்கலாம்.)

அந்த காரணமே இல்லாமல் 20+ அறை வாங்கிய மாணவன் நான்தான்

அந்தப் பள்ளி வகுப்பாசிரியர் திருமதி க்ளோடியா அவர்கள்.

அடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டுக் காரணம் தேடியதாகவே இன்று வரை தெரிகிறது.
கடைசியில் மொக்கை காரணம் என்பது தான் மனதிற்கு நெருடல்.

25+ அறை என்று அரபுநாட்டு தண்டனை கொடுத்து விட்டீர்கள் ஆனால் குற்றம் என்ன என்று ஞாபகம் இருந்தால் சொல்லுங்கள் டீச்சர்.

அடிக்கிறது திட்டுவது ஒருத்தர் ரெண்டு பேருன்னா ஞாபகம் இருக்கும் ஒரு வருடத்திற்கு பலர் என்று கணக்கு இருப்பதால் வேதியியல் ஆசிரியருக்கு ஞாபகம் இல்லாமல் இருக்கலாம் !

இருந்தாலும் குற்றம் என்ன என்று தெரியாமல் பாதிக்கப்பட்ட தண்டனை பெற்ற மாணவனின் வேண்டுகோள்
” நான் செய்த குற்றம் ஞாபகம் இருந்தால் சொல்லுங்கள் டீச்சர்!?”

இந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து கே.எஸ் . பிரபு கிசு கிசு பாணியில் சொன்னது ..

சம்பவத்திற்கு முதல் நாள் கார்திகையான ஒரு மாணவரும் வைரமான ஒரு மாணவரும் கிளாஸ் டீச்சரிடம்
டீச்சர்.. டீச்சர் .. காசிராஜனும் இன்னொரு மாணவரும் தமிழ் டீச்சரை கிளாஸ் எடுக்க விட மாட்றாங்க .. என்று பாகிஸ்தான் தீவிரவாதி கணக்காக இமேஜ் கொடுக்கப்பட்டு உள்ளது. மறுநாள் தண்டனை அறிவிக்கப்பட்டது என்று புரிந்து கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட தமிழ் டீச்சர் கண்டித்து இருந்தால் புகார் சொல்லி இருந்தால் சரியான நியாயம் உண்டு.
தமிழ் பாடத்தை எடுக்காமல் இருந்தால் தமிழ் டீச்சரும் குற்றவாளி இல்லையா ? தமிழ் டீச்சருக்கு என்ன தண்டனை கொடுத்தீர்கள் ? என்று விளக்கம் தெரிவிக்கலாம்
“பார்ப்பன மாணவர் எப்படி பொய் புகார் சொல்வார் ?” என்ற சார்புத்தன்மை காரணமாக இருக்கலாம்.
பிரபு சொன்ன புகார் கிசு கிசு உண்மையா? என்று தண்டனை கொடுத்த க்ளோடியா டீச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஒரு வேளை எனக்கு பதிலாக எனக்கு பின் இருந்த இன்னொரு மாணவரை அடித்து இருந்தால்.

அந்த மாணவர் , ST ஜோசப் பள்ளியில் +2 படிக்கும்போது KHO KHO உடற்கல்வி ஆசிரியரிடம் விளையாட்டின் போது ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி தகராறில் 200 ரூபாய் பெட்ரோல் ஊற்றி ஹீரோ ஹோண்டா வண்டி எரிக்கப்பட்டு பள்ளி நடவடிக்கை எடுத்தது இங்கு நடந்து இருக்கலாம்.

ஒரு வேளை எனக்கு பதிலாக அண்ணாமலை பல்கலைக்கழக பெற்றோரைக் கொண்ட இன்னொரு மாணவரை அடித்து இருந்தால்…

ஒரு வேளை எனக்கு பதிலாக 10+ ஏக்கர் நிலவுடைமையாளர் பெற்றோரைக் கொண்ட இன்னொரு மாணவரை அடித்து இருந்தால்…

1996-1997 வருட , பல 9A 9B மாணவர்களைச் சரியாகப் படிக்கவில்லை என்று TC கொடுத்து வேறு பள்ளிக்கு அனுப்பி 1997-98 வருடம் நிர்மலா மெட்ரிகுலேஷன் பள்ளி பத்தாம் வகுப்பில் 100% ஆல் பாஸ் சாதனை.

பல நேர்மையற்ற நிகழ்வுகள். பல Bias அணுகுமுறைகள்
என்று உங்கள் மீதும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் வருத்தமும் விமர்சனமும் உள்ளது.

நீங்கள் இலவச கல்வி சேவை புரியவில்லை !
பெற்றோர்கள் கொடுத்த பள்ளி கட்டணத்திற்கு கல்வி சேவை புரிந்தீர்களா ? அல்லது அண்ணாமலை பள்ளி பெற்றோர் மாணவர்களுக்கு மட்டும் பார்த்துப் பார்த்துக் கல்வி சேவை புரிந்தீர்களா ? என்ற விமர்சனத்தை உங்கள் முன் வைக்கிறேன்.

எங்களைப் போன்ற பெற்றோர்கள் பின்புலம் இல்லாத மாணவர்கள் அகதிகள்போல வேறு இடத்துக்கு மாறிப் பிழைத்து கொள்ளும் நிலை.

வளர்ந்த பிறகு ஏன் அநியாயமாகச் சில நிகழ்வுகள் என்றே கேள்வி கேட்கும் அகதி நிலைதான்.

பத்தாம் வகுப்பில் (தமிழ் இரண்டாம் பாடம் – பெருஞ்சேரல் இரும்பொறை First lesson. கணைக்கால் இரும்பொறையென நினைக்கிறேன்)
சேரமான் கணைக்கால் இரும்பொறை போரிட்டு சிறை பிடிக்கப்பட்ட நிலையில் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடிக்க மறுத்து ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாக வரலாற்றில் மானத்திற்கு எடுத்துக்காட்டாக சொல்லப்பட்ட கதையை மதிப்பெண்கள் தாண்டி மனதிலேயே தங்கி விட்டது..

மானதிற்கு இழுக்கு என்றால் உயிர் விடுதல் பற்றிப் பாடம் மதிபெண்ணிற்கே எடுக்கப்பட்டது என்று சொன்னாலும் சிலருக்கு அது முக்கியம் அத்தியாவசியமும் கூட . அதனால் ஆசிரியர் செய்த பாரபட்சமான நிகழ்வுகளை எளிய முறையில் குறைந்தபட்ச வருத்தத்தைக் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.

நல்ல வேளை 90களின் பல நிர்மலா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் தைரியசாலிகள்..

இல்லையெனில்.நிர்மலா மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிலை இன்றைய கள்ளக்குறிச்சி விவகாரம் போல உருவெடுத்து இருக்கும் .

என்றைக்காவது க்ளோடியா டீச்சர் அவர்களுக்கு நினைவு திரும்பினால்

“நீங்கள் கொடுங்கோன்மையாக தண்டனை கொடுத்த குற்றம் என்ன? காரணம் என்ன ? என்று கூறுங்கள் !

ஆனாலும் நியாயம் என்ன ? உண்மை என்ன?
என்று உலகிற்கு தெரியாமலே !

                          - Kasirajan.A

பின்குறிப்பு

இந்த சம்பவத்துக்கு காரணமான கார்திகையான மாணவர் ஈரோடு IRTT 2001-2002 ஆண்டு சில சக ரவுடி கல்லூரி மாணவர்கள் ரெகார்ட் நோட்டுகள் , தட்டுமுட்டு சாமான்கள் ,பொது இடத்து தாழ்ப்பாள் எல்லாம் நியாயத்துக்கு புறம்பாக எடைக்குப் போட்டது குறித்து மாணவர் குணசேகரன் கேள்வி எழுப்பியபோது விரல் சூப்பி கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு பேசினால்,போட்டுக் கொடுத்தால் வாயிலே அடி விழும் என்பது 3-4 வருடத்தில் நன்கு உலகத்தை தெரிந்து கொண்டாரா ?

சக மாணவர் தட்டில் உனக்கு மட்டும் ஏன் 3-4 அப்பளம் என்று விளையாட்டாகக் கைவைத்து எடுத்ததில் . கார்த்திகையான மாணவர் தட்டை முழுவதும் குப்பையில் கொட்டிவிட்டு வந்த நிகழ்வைத் தீண்டாமை இல்லாமல் எதில் வகைப்படுத்த ?

கார்திகையான மாணவர் இன்று வரை முதலாளிக்கு கூஜா தூக்கும் வேலை தவிர என்ன சமூக அக்கறையுடன் நடந்து கொண்டார் என்பது ஊருக்கே வெளிச்சம்!

Leave a comment